ஜப்பான், இலங்கையுடன் நண்பனாக செயற்படுகிறது

ஜப்பான், இலங்கையுடன் வெளிப்படையான நண்பனாக செயற்படுகிறது - ஜப்பான் பிரதமர்

by Staff Writer 15-03-2018 | 12:00 PM
COLOMBO (News 1st) - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ் ஜப்பானுக்கும், இலங்கைக்குமான உறவு புதிய பரிணாமத்துடன் முன்னோக்கி செல்வதாக ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே தெரிவித்துள்ளார். ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதிக்கு அந்நாட்டு தலைநகரிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் நேற்றிரவு நடைபெற்ற விருந்துபசாரத்தின் போது ஜப்பான் பிரதமர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு, சக்திமிக்க, நட்புறவுடன்கூடிய நம்பிக்கைமிகு உறவாக காணப்படுவதாகவும் ஜப்பான் பிரதமர் கூறியுள்ளார். இதேவேளை, ஜப்பான் அதிகாரிகளுடனான கலந்துரையாடல்களானது இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீட்டு திட்டங்களை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜப்பான், இலங்கையுடன் சிறந்த வெளிப்படையான நண்பனாக செயற்படுவதாகவும், எதிர்காலத்தில் அனைத்து துறைகளையும் விஸ்தரிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். https://www.youtube.com/watch?v=jMFo_A_g1DU