கொழும்பில் ஹெரோய்னுடன் ஒருவர் கைது

கொழும்பில் 18 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோய்னுடன் ஒருவர் கைது

by Staff Writer 15-03-2018 | 11:01 AM
COLOMBO (News 1st) - 18 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோய்னுடன் சந்தேகநபர் ஒருவர் கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து 150 கிராம் 600 மில்லிகிராம் ஹேரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 65 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை மாளிகாகந்த நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் கூறினர். https://www.youtube.com/watch?v=luPtHuOv5_E