கதாநாயகியாகும் ஷாருக்கான் மகள்

கதாநாயகியாகும் ஷாருக்கான் மகள்

கதாநாயகியாகும் ஷாருக்கான் மகள்

எழுத்தாளர் Staff Writer

15 Mar, 2018 | 11:38 am

COLOMBO (News 1st) – பொலிவூட்டில் முன்னணி நாயகனாக வலம் வரும் ஷாருக்கானின் மகள் சுகானாவை கதாநாயகியாக நடிக்க வைக்க இயக்குனர்கள் பலர் அணுகுவதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி ‘தடக்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி நடித்து வருகிறார். தொடர்ந்து ஷாருக்கான் மகள் சுகானாவும் கதாநாயகியாகிறார்.

17 வயதான சுகானா கல்லூரியில் படிப்பதுடன் மாடலிங்கும் செய்து வருகிறார். நடிப்பு, நடன பயற்சிகளும் பெறுகிறார்.

சுகானாவுக்கு நடிகையாக ஆசை வந்துள்ளதாகவும் இதற்காக தந்தை ஷாருக்கான் மூலம் கதை கேட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு ஷாருக்கான் நிருபர்களிடம் கூறும்போது “சுகானாவுக்கு சினிமாவில் நடிக்க ஆசை உள்ளது. நடிப்பதற்கான திறமையும் தோற்றமும் அவளுக்கு உள்ளது. முதலில் படிப்பை முடித்து விட்டு அதன்பிறகு மற்ற விடயங்கள் குறித்து யோசிக்கும்படி நான் அறிவுரை கூறியிருக்கிறேன்” என்றார்.

இயக்குனர்கள் பலர் சுகானாவை கதாநாயகியாக நடிக்க வைக்க கதைகளுடன் ஷாருக்கானை அணுகி வருகிறார்கள். அதில் ஒரு படத்தில் சுகானா தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்