''ரஷ்யா சர்வதேசத்தினால் தனிமைப்படுத்தப்படும்''

''ரஷ்யா சர்வதேசத்தினால் தனிமைப்படுத்தப்படும்'' - ரெக்ஸ் டில்லர்சன்

by Staff Writer 14-03-2018 | 1:46 PM
COLOMBO (News 1st) - ரஷ்யா சர்வதேசத்தினால் தனிமைப்படுத்தப்படும் என பதவி நீக்கப்பட்ட அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமது பிரியாவிடை உரையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய அரசாங்கத்தின் இடையூறு விளைவிக்கும் நடவடிக்கைகளுக்கு பதிலளிக்க வேண்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ரஷ்யாவிற்கான முன்னாள் பிரித்தானிய உளவு அதிகாரியொருவர் அண்மையில் விஷம் தடவப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். இது ரஷ்யாவின் திட்டமிட்ட சதி நடவடிக்கையென்பது தௌிவாக புலப்படுவதாக ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்திருந்தார். அவர் இந்த தகவலை வெளியிட்ட அடுத்த நாளில் பதவி நீக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சனை பதவியிலிருந்து நீக்கி அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று உத்தரவிட்டார். இதனையடுத்து அந்த பதவிக்கு அமெரிக்காவின் மத்திய புலனாய்வு துறை பணிப்பாளர் Mike Pompe நியமிக்கப்பட்டுள்ளார்.