பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் பலப்படுத்த தீர்மானம்

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் பலப்படுத்த தீர்மானம்

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் பலப்படுத்த தீர்மானம்

எழுத்தாளர் Bella Dalima

14 Mar, 2018 | 8:34 pm

Colombo (News 1st) 

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் பலப்படுத்த தீர்மானித்துள்ளனர்.

பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 15 நாட்கள் கடந்துள்ளன.

மாதாந்த நிலுவைக் கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தி 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்விசாரா ஊழியர்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்து வருகின்றனர்.

பிரச்சினையைத் தீர்ப்பதற்காக தற்போதைய உயர் கல்வி அமைச்சர் கபீர் ஹாஷிம் பேச்சுவார்த்தை நடத்த சந்தர்ப்பம் வழங்கியிருந்த போதிலும், அதன் பின்னர் இதுவரை எவ்வித கலந்துரையாடல்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லையென தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டுகின்றன.

கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக கொழும்பு மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பல்கலைக்கழகங்களின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்