சுற்றுலா விசாவில் நாட்டிற்கு வந்து தொழிலில் ஈடுபட்ட இந்திய பிரஜைகள் 23 பேர் கைது

சுற்றுலா விசாவில் நாட்டிற்கு வந்து தொழிலில் ஈடுபட்ட இந்திய பிரஜைகள் 23 பேர் கைது

சுற்றுலா விசாவில் நாட்டிற்கு வந்து தொழிலில் ஈடுபட்ட இந்திய பிரஜைகள் 23 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

14 Mar, 2018 | 12:31 pm

COLOMBO (News 1st) – சுற்றுலா விசாவில் நாட்டிற்கு வந்து தொழிலில் ஈடுபட்டிருந்த 23 இந்திய பிரஜைகள் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிடைத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் 9 பேர் ஜோதிடம் பார்கும் தொழில் செய்தமை தெரியவந்துள்ளது.

மேலும் 9 பேர் ஆடை விற்பனையில் ஈடுபட்டிருந்ததாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி நாட்டில் இருந்து திருப்பியனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என திணைக்களத்தின் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்