சமூக வலைத்தளங்கள் தொடர்பில் புதிய வேலைத்திட்டம் – ஜனாதிபதி

சமூக வலைத்தளங்கள் தொடர்பில் புதிய வேலைத்திட்டம் – ஜனாதிபதி

சமூக வலைத்தளங்கள் தொடர்பில் புதிய வேலைத்திட்டம் – ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

14 Mar, 2018 | 8:15 am

COLOMBO (News 1st) – சமூக வலைத்தள பாவனை தொடர்பில் புதிய வேலைத்திட்டமொன்றை எதிர்வரும் வாரங்களில் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி நேற்று பிற்பகல் ஜப்பான் டோக்கியோ நகரில் உள்ள இலங்கை பிரஜைகளை சந்தித்த ​போதே இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தேசிய நல்லிணக்கத்தை சீர்குலைக்கும், தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் மற்றும் தனிநபர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விடயங்களை நீக்கி சிறந்த தகவல்களை மாத்திரம் பரிமாறக்கூடிய ஊடகங்களான சமூக வலைத்தளங்களை மாற்ற வேண்டிய அவசியம் உள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை எதிர்வரும் சில தினங்களில் நீக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்