காத்மண்டு விமான விபத்தில் 50 பேர் பலி

காத்மண்டு விமான விபத்தில் 50 பேர் பலி

by Staff Writer 13-03-2018 | 7:49 AM
COLOMBO (News 1st) - காத்மண்டுவில் விமானம் விபத்துக்குள்ளான பகுதிக்கு சென்று நேபாள பிரதமர் Khadga Prasad Oli பார்வையிட்டுள்ளார் இந்த கவலைக்கிடமான சம்பவத்தினால் நேபாளின் அனைத்து செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். டாக்காவில் இருந்து பயணித்த இந்த விமானம் விபத்துக்குள்ளாகி த்ரிபுவன் சர்வதேச விமான நிலையம் அருகே எரிந்து வீழந்துள்ளது. இதுவரையில் 50 இற்கும் மேற்பட்டோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் பலர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதுடன் தீயணைப்பு படையினர் மற்றும் நேபாள் பொலிஸார் விபத்திற்குள்ளான விமானத்தின் பாகங்கள் மற்றும் சிதறிக் கிடக்கும் பயணிகளின் பொருட்கள் என்பவற்றையும் அகற்றி வருகின்றனர். குறித்த விமானத்தில்33 நேபாளி பயணிகள் 32 பங்களாதேஷ் பயணிகள் மற்றும் ஒரு சீன மற்றும் மாலைத்தீவு பிரஜைகள் பயணித்துள்ளனர். பங்களாதேஷில் வருடாந்த வர்த்தக மாநாடு ஒன்றை முடித்துவிட்டு வருகைத்தந்து கொண்டிருந்த 12 நேபாளி சுற்றுலா முகவர்களும் இதில் பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது அதிக மலைப்பகுதிளைக்கொண்ட நேபாள பாதுகாப்பற்ற விமான சேவையை கொண்டுள்ளதுடன் விமான விபத்துக்கள் அதிகம் இங்கு பதிவாகின்றமை குறிப்பிடத்தக்கது.