வரி அறவிடுவது தொடர்பில் வருமான வரித் திணைக்களத்தின் புதிய நிலைப்பாடு

வரி அறவிடுவது தொடர்பில் வருமான வரித் திணைக்களத்தின் புதிய நிலைப்பாடு

வரி அறவிடுவது தொடர்பில் வருமான வரித் திணைக்களத்தின் புதிய நிலைப்பாடு

எழுத்தாளர் Staff Writer

13 Mar, 2018 | 7:26 am

COLOMBO (News 1st) – வரி செலுத்த வேண்டிய வர்த்தகர்கள் பலர் அதிலிருந்து தவிர்ந்து இருப்பதாக தேசிய வருமான வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வரி செலுத்துவதற்கு தவறுபவர்களிடமிருந்து அவற்றை அறவிடுவதற்கு எதிர்வரும் 03 மாத காலப்பகுதிக்குள் 03 இலட்சம் வரி தொடர்பான ஆவணங்கள் ஆராயப்படவுள்ளதாக அதன் ஆணையாளர் அய்வன் திசாநாயக்க தெரிவித்தார்

15 இலட்சம் பேர் அளவில் தற்போது வரி செலுத்துவதாக ஆணையாளர் தெரிவித்தார்.

இதனூடாக கடந்த மாதம் 53 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டதாக தேசிய வருமான வரித் திணைக்களம் குறிப்பிடுகின்றது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்