நடிப்பிற்கு இடைவேளை விட்டது ஏன்: சுகன்யா விளக்கம்

நடிப்பிற்கு இடைவேளை விட்டது ஏன்: சுகன்யா விளக்கம்

நடிப்பிற்கு இடைவேளை விட்டது ஏன்: சுகன்யா விளக்கம்

எழுத்தாளர் Bella Dalima

13 Mar, 2018 | 5:07 pm

தமிழ் பட உலகில் பிசியாக நடித்து வந்த சுகன்யா நடிப்பிற்கு இடைவேளை விட்டது ஏன் என்பதற்கு விளக்கமளித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது,

நான் சிறந்த நாட்டியக் கலைஞராக வரவே ஆசைப்பட்டேன். ஆனால் ‘புது நெல்லு புது நாத்து’ படம் மூலம் நடிகை ஆனேன். முதல் படத்தில் நான், நெப்போலியன் உட்பட 8 பேர் புதுமுகங்கள். அறிமுகமான முதல் படத்திலேயே 9 விருதுகள் எனக்கு கிடைத்தது.
பின்னர் நான் நடித்த ‘சின்னக்கவுண்டர்’ உட்பட பல படங்கள் எனக்கு பெயர் சொல்லும் படங்களாக அமைந்தன. கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு சினிமாவில் ‘பிசி’யாக இருந்தேன். அது எனது சினிமா வாழ்க்கையின் பொற்காலம். இப்போது வாரந்தோறும் புதிய தமிழ் படங்கள் வருவதை பார்த்துக்கொண்டு இருக்கிறேன். சில படங்கள் நல்ல கதை அம்சத்துடன் வருகின்றன. தொழில் நுட்பங்கள் அதிகமாக வளர்ச்சி அடைந்துள்ளன. கருத்து சுதந்திரம் எங்கும் பரவலாகி இருக்கிறது. நடப்பதை கவனித்து வருகிறேன்.

நடிகர்கள் அரசியலுக்கு வருவது தற்போது பெரும் பேச்சாக உள்ளது. அதுபற்றி பதில் சொல்ல விரும்பவில்லை. மக்கள் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

தெலுங்கில் நான் சமீபத்தில் நடித்த படம் மூலம் எனக்கு நல்ல பெயர் கிடைத்திருக்கிறது. விரைவில் சேரன் படத்தில் நடிக்க இருக்கிறேன். நிறைய படங்களில் நடிப்பதைவிட நல்ல படங்களில் அழுத்தமான வேடத்தில் நடிக்க விரும்புகிறேன். இதனால் நடிப்பில் இடைவெளி ஏற்பட்டிருக்கிறது. மக்கள் என்னை எளிதில் மறக்கமாட்டார்கள். நானும் மறக்க முடியாது.

என குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்