தனியார் பஸ் சாரதியைத் தாக்கிய தென் மாகாண சபை உறுப்பினருக்கும் அவரது மனைவிக்கும் விளக்கமறியல்

தனியார் பஸ் சாரதியைத் தாக்கிய தென் மாகாண சபை உறுப்பினருக்கும் அவரது மனைவிக்கும் விளக்கமறியல்

தனியார் பஸ் சாரதியைத் தாக்கிய தென் மாகாண சபை உறுப்பினருக்கும் அவரது மனைவிக்கும் விளக்கமறியல்

எழுத்தாளர் Bella Dalima

13 Mar, 2018 | 7:38 pm

Colombo (News 1st) 

தலங்கம – கொஸ்வத்த பகுதியில் தனியார் பஸ் சாரதி ஒருவரை தாக்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட தென் மாகாண சபை உறுப்பினர் எம்.கே. கசுனும் அவரது மனைவியும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடுவலை நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் இன்று அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது, மாகாண சபை உறுப்பினர் மற்றும் அவரது மனைவியை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அண்மையில் பத்தரமுல்ல – கொஸ்வத்த பகுதியில் தென் மாகாண சபை உறுப்பினர் எம்.கே. கசுனும் அவரது மனைவியும் துப்பாக்கியுடன் பஸ்ஸின் சாரதியைத் தாக்கினர்.

இந்த தாக்குதல் சம்பவம் நபரொருவரால் கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்