காணாமற்போன வெற்றிலைக்கேணி பகுதி மீனவர் சடலமாக மீட்பு

காணாமற்போன வெற்றிலைக்கேணி பகுதி மீனவர் சடலமாக மீட்பு

காணாமற்போன வெற்றிலைக்கேணி பகுதி மீனவர் சடலமாக மீட்பு

எழுத்தாளர் Staff Writer

13 Mar, 2018 | 9:09 am

COLOMBO (News 1st) – கடற்றொழிலுக்கு சென்று காணாமற்போன யாழ். வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதி மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த 9 ஆம் திகதி கடலுக்குச் சென்றவர் வீடு திரும்பாத நிலையில் அவரின் படகு மாத்திரம் மாத்தலன் பகுதியில் ஏற்கனவே கரையொதுங்கியது.

மீனவரின் உறவினர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை குறித்த மீனவரின் சடலம் வெற்றிலைக்கேணி கடற்கரையில்,கரையொதுங்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீதவான் விசாரணையடுத்து, சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

38 வயதான தேவதாஸ் ஜூலி அலக்கஷன் என்ற பெயருடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்