ஜனாதிபதி ஜப்பான் விஜயம்

ஜனாதிபதி ஜப்பான் விஜயம்

by Staff Writer 12-03-2018 | 12:00 PM
COLOMBO (News 1st) - அரச விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஜப்பானை சென்றடைந்தார். ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபேயின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி இந்த விஜயத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை ஜனாதிபதி அங்கு தங்கியிருப்பார் எனவும் வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி நாளை ஜப்பான் பேரரசர் அகிஹிட்டோவை சந்திக்கவுள்ளதுடன், நாளை மறுதினம் ஜப்பான் பிரதமரை சந்திக்கவுள்ளார். கலந்துரையாடலின் பின்னர் ஜப்பான் பிரதமர் இலங்கை ஜனாதிபதிக்காக இராப்போசன விருந்துபசாரத்தையும் ஏற்பாடு செய்துள்ளார். இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தவது தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்படவுள்ளது. சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவையை மேட்படுத்தும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் மற்றும் ஜப்பான் ஒத்துழைப்பு முகவர் அமைப்பு ஆகிவற்றுக்கிடையில் யென்கடன் உடன்படிக்கையொன்றும் இந்த விஜயத்தின் போது கைச்சாத்திடப்படவுள்ளது. ஜப்பான் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டமொன்றிலும் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ஜப்பானில் வசிக்கும் இலங்கை பிரஜைகளையும் சந்திக்கவுள்ளார். https://www.youtube.com/watch?v=mm6TU6omihw