குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு

குரங்கணியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு

by Staff Writer 12-03-2018 | 2:31 PM
COLOMBO (News 1st) - தேனி மாவட்டம் குரங்கணியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சுற்றுலா வழிகாட்டி ராஜேஸ் என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் குரங்கணியில் நேற்று ஏற்பட்ட காட்டுத்தீயில் மலையேறும் பயிற்சிக்கு சென்ற 36 பேர் சிக்கிக்கொண்டனர். தீயின் தாக்கத்தால் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 27 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலியான 9 பேரின் சடலங்கள் விமானப்படை ஹெலிகொப்டர் மூலம் மீட்கப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த மலையேற்று பயிற்சி நிறுவனம் இந்த பயணத்தை ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. முறையான அனுமதி பெறாமல் காட்டுக்குள் அவர்கள் சென்றுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மலையேற்றத்திற்கு அழைத்துச் சென்ற சுற்றுலா வழிகாட்டி ராஜேஸ் என்பவரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். இதற்கிடையே, காட்டுத்தீ குறித்து விசாரணை நடத்தப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் அறிவித்துள்ளார்