காத்மண்டு விமான விபத்து: 40 பேர் உயிரிழப்பு

காத்மண்டு விமான விபத்து: 40 பேர் உயிரிழப்பு

by Staff Writer 12-03-2018 | 4:29 PM
COLOMBO (News 1st) - பங்களாதேஷ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள விமானமொன்று நேபாளம் தலைநகர் காத்மண்டு விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்திற்குள்ளான விமானத்தில் 71 பயணிகள் இருந்ததுடன் அவர்களில் குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 22 பேர் பாதுகாப்பாக வௌியேற்றப்பட்டதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. விமானத்தில் இருந்து புகை வௌியேறுகின்ற காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வௌியாகியுள்ளன. காத்மண்டு விமான நிலையத்திற்கு வரும் அனைத்து விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.