by Staff Writer 12-03-2018 | 7:59 PM
COLOMBO (News 1st) - இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கில் இணையத்தள பாவனை குறித்து இலங்கை அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை வரவேற்பதாக அமெரிக்காவின் சி.என்.பி.சி சேவை செய்தி வௌியிட்டுள்ளது.
இனங்களுக்கிடையில் குரோதம் ஏற்படும் வகையில் பொய்யான பிரச்சாரங்களை மேற்கொள்ளும் வகையில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கையை அமெரிக்காவினாலும் கூட எடுக்க முடியாது என அந்த செய்தி சேவையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொய்யான பிரச்சாரங்களை மேற்கொள்ளல் மற்றும் தூண்டுதலுக்கு எதிராக தௌிவாக சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் தமது இணையத்தளத்திற்கு இருப்பதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவ்வாறான விடயங்களை ஒழிக்கும் வகையில் தமது நிறுவனமும் செயற்பட்டு வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜெர்மனியின் புதிய அரசாங்கம், இணையத்தள வசதிகளை வழங்கும் நிறுவனங்கள் குரோதத்தை தூண்டும் பிரசாரங்களை நீக்காமைக்கு எதிராக தண்டனை வழ்குவதற்கு ஏதுவாக சட்டத் திருத்தம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது
பேஸ்புக்கை முறையற்ற விதத்தில் பயன்படுத்தும் நாடுகள் வரிசையில் இலங்கையும் அடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் இணையத்தள பாவனைக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சட்டத்தரணிகள் சங்க தேசிய ஒன்றியம் இலங்கை மனித உரிமைகள் ஆனைக்குழுவில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளது.
மேலும் இணையத்தள பாவனைக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையிவ் முறைப்பாடு செய்வதற்கு நேற்று நடவடிக்கை எடுத்ததாக அகில இலங்கை மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையுத்தரவு காரணமாக 4.5 மில்லியனுக்கும் அதிகமான இணையத்தள பாவனையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை பேஸ்புக்க உள்ளிட்ட சமூக தளங்களுக்கு விதிக்க்ப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானங்களையும் எடுக்கவில்லை என தொலைத்தொடர்பு மற்றும் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
https://www.youtube.com/watch?v=LN_UgTnLGhs