மீன் உற்பத்தியை 8 இலட்சம் மெற்றிக்தொன் வரை அதிகரிக்கத் திட்டம்

மீன் உற்பத்தியை 8 இலட்சம் மெற்றிக்தொன் வரை அதிகரிக்கத் திட்டம்

மீன் உற்பத்தியை 8 இலட்சம் மெற்றிக்தொன் வரை அதிகரிக்கத் திட்டம்

எழுத்தாளர் Staff Writer

12 Mar, 2018 | 2:13 pm

COLOMBO (News1st) – இந்த வருடத்தில் நாட்டின் மீன் உற்பத்தியை எட்டு இலட்சம் மெற்றிக்தொன் வரை அதிகரிப்பதற்கு மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இந்த இலக்கை அடைவதற்காக பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

மீன்பிடியின் பின்னரான அழிவை கட்டுப்படுத்தல், குளிரூட்டல் வசதிகளை வழங்கல், மற்றும் தொழில்நுட்ப உபகரணங்களுடன் கூடிய மீன்பிடி படகுகளை அறிமுகப்படுத்தல் போன்ற திட்டங்களும் அவற்றில் உள்ளடங்குவதாக அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும் 50 சதவீத சலுகையின் கீழ் மீனவர்களுக்கு இழுவை படகுகளை வழங்குதல், மீனவர்களை ஊக்குவித்தல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்