நிலாவெளியில் நீரில் மூழ்கி உயிரிழந்த ஐவரின் பூதவுடல்கள் நல்லடக்கம்

நிலாவெளியில் நீரில் மூழ்கி உயிரிழந்த ஐவரின் பூதவுடல்கள் நல்லடக்கம்

நிலாவெளியில் நீரில் மூழ்கி உயிரிழந்த ஐவரின் பூதவுடல்கள் நல்லடக்கம்

எழுத்தாளர் Staff Writer

12 Mar, 2018 | 9:29 pm

COLOMBO (News 1st) -திருணேமலை நிலாவெளியில் நீரில் மூழ்கி உயிரிழந்த ஐவரின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெற்றன.

நிலாவெளி பெரியகுளத்திற்குச் சென்ற மூன்று குடும்பங்களைச் சேர்ந்த ஐவர் நேற்று நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்தனர்.

தாமரை இலை பறிக்கச்சென்ற நான்கு சிறுவர்கள் உள்ளிட்ட ஐவரினதும் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.

நிலாவெளி உரோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில் கல்வி பயின்றுவந்த ஏழு மற்றும் ஒன்பது வயதுகளையுடைய சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் பூதவுடல்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டதன் பின்னர் நிலாவெளி இந்து மயானத்திற்கு ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டன.

மக்களின் கண்ணீர் அஞ்சலிக்கு மத்தியில் ஐவரினதும் பூதவுடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்