by Staff Writer 11-03-2018 | 4:07 PM
சமூக வலைத்தளங்களினூடாக வதந்திகளைப் பரப்பியவர்கள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வதந்திகளை பரப்பிய 186 பேஸ்புக் கணக்குகள் இதுவரை அடையாளங் காணப்பட்டுள்ளதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பெரும்பாலானோர் வதந்திகளை பரப்பியதாக தகவல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
சம்பங்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம், மற்றும் பொலிஸார் விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக சைபர் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை திகனயில் ஏற்பட்ட மோதலை அடுத்து, தற்காலிகமாக தடை செய்யப்பட்ட சமூக வலைத்தளங்கள், எதிர்வரும் ஓரிரு தினங்களுக்குள் வழமைக்கு திரும்பும் என தகவல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.