நீல வர்ணங்களின் மோதல் வெற்றி தோல்வியின்றி நிறைவு

நீல வர்ணங்களின் மோதல் வெற்றி தோல்வியின்றி நிறைவு

by Staff Writer 11-03-2018 | 8:05 PM
COLOMBO (News 1st) - நீல வர்ணங்களின் மோதல் என வர்ணிக்கப்படும் கொழும்பு ரோயல் மற்றும் கல்கிசை பரிதோமாவின் (புனித தோமஸ்) கல்லூரி அணிகளுக்கு இடையிலான 139 ஆவது வருடாந்த கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றது. கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் கல்கிஸ்ஸை பரிதோமாவின் அணி முதல் இன்னிங்ஸில் 166 ஓட்டங்களையும், கொழும்பு ரோயல் கல்லூரி அணி 178 ஓட்டங்களையும் பெற்றன. விக்கெட் இழப்பின்றி 3 ஓட்டங்களுடன் கல்கிஸ்ஸை பரிதோமாவின் கல்லூரி அணி இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்தது. கல்கிஸ்ஸை பரிதோமாவின் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஷலின் டி மெல் மற்றும் துலித் குணரத்தின ஆகியோர் அரைச் சதங்களை பூர்த்தி செய்தனர். இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டுக்காக 106 ஓட்டங்களை பகிர்ந்தனர். சித்தார அபுஹின்ன 47 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். கல்கிஸ்ஸை பரிதோமாவின் கல்லூரி அணி 6 விக்கெட் இழப்பிற்கு 227 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை நிறுத்துவதாக அறிவித்த நிலையில் போட்டியில் ரோயல் கல்லூரி அணியின் வெற்றி இலக்கு 216 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது. வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ரோயல் கல்லூரி அணியின் முதல் நான்கு விக்கெட்டுக்களும் 54 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன. என்றாலும் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ரோயல் கல்லூரியின் உப தலைவரான கவிந்து மதர சிங்க ஆட்டமிழக்காமல் 58 ஓட்டங்களைப் பெற்றார். கொழும்பு ரோயல் கல்லூரி அணி 6 விக்கெட் இழப்பிற்கு 143 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. இதன்பிரகாரம் கொழும்பு ரோயல் மற்றும் கல்கிஸ்ஸை பரிதோமாவின் கல்லூரி அணிகளுக்கு இடையிலான 139 ஆவது வருடாந்த கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றது. https://www.youtube.com/watch?v=yX89vfVptFM