கண்டியில் அனைத்து பாடசாலைகளும் நாளை திறப்பு

கண்டியில் மூடப்பட்டுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை திறப்பு

by Staff Writer 11-03-2018 | 5:11 PM
COLOMBO (News 1st) - கண்டி சம்பவம் காரணமாக மூடப்பட்டுள்ள அனைத்து பாடசாலைகளும் கல்வி நடவடிக்கைகளுக்காக நாளை (12) மீண்டும் திறக்கடவுள்ளன. கல்வி நடவடிக்கைகள் இடம்பெறாத நாட்களுக்கு பதிலாக வேறு தினங்களில் கற்றல் செயற்பாடுகளை நடத்த எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். தற்போது மாவட்டத்தில் சுமூகமான நி​லைமை காணப்படுவதால் பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும் பாதுகாப்பு தொடர்பில் ஏதேனும சிக்கல் ஏற்படுமாயின் பாதுகாப்பு தரப்பினரை தொடர்பு கொள்ள கல்வி அதிகாரிகள் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். வன்முறைச் சம்பவங்கள் காரணமாக கடந்த செவ்வாய்க்கிழமை முதல் கண்டி நிர்வாக மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.