வடக்கின் பெருஞ்சமர்: யாழ். மத்திய கல்லூரி வெற்றி

வடக்கின் பெருஞ்சமர்: யாழ். மத்திய கல்லூரி வெற்றி

by Bella Dalima 10-03-2018 | 7:35 PM
Colombo (News 1st) 112 ஆவது வடக்கின் பெருஞ்சமர் வருடாந்த மாபெரும் கிரிக்கெட் போட்டியில் யாழ். மத்திய கல்லூரி அணி ஒரு விக்கெட்டால் வெற்றி வாகை சூடியது. 112 ஆவது வடக்கின் சமர் வருடாந்த மாபெரும் கிரிக்கெட் போட்டி யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் சென். ஜோன்ஸ் அணி 217 ஓட்டங்களையும், யாழ். மத்திய கல்லூரி அணி 328 ஓட்டங்களையும் பெற்றதுடன் இரண்டாம் இன்னிங்ஸில் சென். ஜோன்ஸ் அணி 219 ஒட்டங்களைப் பெற்றது. இதன்படி, 109 ஓட்டங்களை வெற்றி இலக்காகக்கொண்டு பதிலளித்தாடிய யாழ். மத்திய கல்லூரி அணி இன்றைய ஆட்ட நாள் முடிவுக்குவர ஒரு சில ஓவர்கள் எஞ்சியிருந்த போது, 9 விக்கெட் இழப்பிற்கு வெற்றியை எட்டியது. எஸ். மதுஷன் 53 ஓட்டங்களையும் வி. வியாஷ்கான் 36 ஓட்டங்களையும் பெற்று வெற்றிக்கு வழிவகுத்தனர். சிறப்பாக பந்து வீசிய கே.கபில்ராஜ் 5 விக்கெட்களைக் கைப்பற்றினார்.