ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியா சென்றுள்ளார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியா சென்றுள்ளார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியா சென்றுள்ளார்

எழுத்தாளர் Bella Dalima

10 Mar, 2018 | 3:45 pm

Colombo (News 1st)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவிற்கு சென்றுள்ளார்.

சர்வதேச சூரியசக்தி ஒருங்கிணைப்பு சங்கத்தின் முதலாவது மாநாட்டில் கலந்துகொள்ளும் நோக்கிலேயே ஜனாதிபதி இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.

பிரான்ஸ் மற்றும் இந்தியா இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன.

30 நாடுகளின் உலகத் தலைவர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் பலர் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.

கடந்த மாதம் 12 ஆம் திகதி முதல் சர்வதேச சூரிய ஒளி உற்பத்தி கூட்டமைப்பில் இலங்கையும் உறுப்பு நாடாக விளங்குகின்றது.

இதேவேளை, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானுக்கும் விஜயம் செய்யவுள்ளார்.

எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை ஜனாதிபதி, ஜப்பானில் தங்கியிருப்பா​ர் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்