ஒல்லியான ஹன்சிகா: வருத்தத்தில் ரசிகர்கள்

ஒல்லியான ஹன்சிகா: வருத்தத்தில் ரசிகர்கள்

ஒல்லியான ஹன்சிகா: வருத்தத்தில் ரசிகர்கள்

எழுத்தாளர் Bella Dalima

10 Mar, 2018 | 6:55 pm

ஹன்சிகாவுக்கு பட வாய்ப்புகள் இல்லாததால், அவரது உடல் எடையைக் குறைத்துள்ளார்.

அவரது புதிய மெலிவான தோற்றத்தைப் பார்த்த ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

தமிழ் பட உலக ரசிகர்களால் சின்ன குஷ்பு என்று செல்லமாக அழைக்கப்படுபவர் ஹன்சிகா.

முன்னணி நாயகர்களுடன் நடித்த ஹன்சிகாவின் சிரிப்பும், உடல் அமைப்பும் ரசிகர்களைக் கவர்ந்தது.

கை நிறைய படங்களை வைத்திருந்த ஹன்சிகாவுக்கு, தற்போது முன்பு போல் படங்கள் இல்லை.

இந்த நிலையில், உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

சமீபத்தில் ஓரளவு எடையைக் குறைத்த ஹன்சிகா, அந்த படத்தை இணையத்தளத்தில் வெளியிட்டார். அப்போதே அந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள், இனி உடல் எடையை குறைக்க வேண்டாம், முன்பு இருந்த உடல் அமைப்புதான் அழகு என்று கூறியிருந்தனர்.

ஆனால், ஹன்சிகா தனது உடல் எடையை மேலும் குறைத்து ஒல்லியாகிவிட்டார்.

தற்போது அவரின் படத்தைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நாளுக்கு நாள் இப்படி ஒல்லியாகிக் கொண்டே போகாதீங்க. பார்க்கவே வேதனையாக இருக்கிறது. பழைய உடம்புக்கு வாங்க. அதுதான் உங்களுக்கு தனி அழகு. அதை கெடுக்க வேண்டாம். உங்களை முன்பு போல பார்க்க ஆசைப்படுகிறோம்

என்று ஏராளமான ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்