ஐ.நா-வின் ஜெஃப்ரி D. ஃபெல்ட்மென் இலங்கை விஜயம்

ஐ.நா. அரசியல் விவகாரங்களுக்கான துணை செயலாளர் நாயகம் ஜெஃப்ரி D. ஃபெல்ட்மென் இலங்கை விஜயம்

by Bella Dalima 09-03-2018 | 3:55 PM
Colombo (News 1st) ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான துணை செயலாளர் நாயகம் ஜெஃப்ரி D. ஃபெல்ட்மென் நாட்டிற்கு வருகை தந்துள்ளார். எதிர்வரும் 11 ஆம் திகதி வரை அவர் நாட்டில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெஃப்ரி D. ஃபெல்ட்மென் தனது விஜயத்தின் போது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளை சந்திக்கவுள்ளார். இதேவேளை, ஐ.நா-வின் அரசியல் விவகாரங்களுக்கான துணை செயலாளர் நாயகம், கண்டி மாவட்டத்திற்கும் விஜயம் செய்யவுள்ளார்.