யாழில் வெங்காய விளைச்சல் அதிகரிப்பு

யாழில் வெங்காய விளைச்சல் அதிகரிப்பு

யாழில் வெங்காய விளைச்சல் அதிகரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

09 Mar, 2018 | 6:43 pm

Colombo (News 1st)

யாழ். மாவட்டத்தில் வெங்காய விளைச்சல் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் வெங்காய உற்பத்தியில் 75 வீதமான வெங்காயம் யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்றது.

யாழ். மாவட்டத்தின் வலிகாமம் மற்றும் வடமராட்சி பகுதிகளில் அதிகளவு வெங்காய செய்கை மேற்கொள்ளப்படுகின்றது.

அங்கிருந்தே கொழும்பு உட்பட பிற மாவட்டங்களுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

எனினும், பருவ மழை மாற்றத்தினால் கடந்த இரு போக வெங்காய செய்கை அழிவடைந்தது. இதனால், விவசாயிகளின் வருமானம் வீழ்ச்சியடைந்ததுடன், வெங்காயத்தின் விலையும் அதிகரித்திருந்தது.

இம்முறை பருவப்பெயர்ச்சி மழையின் சாதகத்தினால் வெங்காய செய்கை அறுவடை அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

350 ரூபாவிற்கும் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ வெங்காயத்தை தற்போது 100 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய முடிவதாக நுகர்வோர் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்