பிரச்சினைகளின் பின்புலத்தில் இருப்பவர்களை நாட்டு மக்களுக்கு வௌிப்படுத்துவோம்: ரஞ்சித் மத்துமபண்டார

பிரச்சினைகளின் பின்புலத்தில் இருப்பவர்களை நாட்டு மக்களுக்கு வௌிப்படுத்துவோம்: ரஞ்சித் மத்துமபண்டார

பிரச்சினைகளின் பின்புலத்தில் இருப்பவர்களை நாட்டு மக்களுக்கு வௌிப்படுத்துவோம்: ரஞ்சித் மத்துமபண்டார

எழுத்தாளர் Bella Dalima

09 Mar, 2018 | 8:56 pm

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார பத்தரமுல்லயிலுள்ள அமைச்சில் இன்று தனது கடமைகளை ஆரம்பித்தார்.

இந்த நிகழ்வில் அமைச்சர்கள் சிலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்ததாவது,

நாட்டில் இனவாதம் மற்றும் சமூகங்களுக்கிடையில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் வகையில் சில அமைப்புக்கள் செயற்படுவதை நாம் அண்மையில் கண்டோம். இதன் பின்புலத்தில் யார் இருந்தார்கள் என்பதனை நாம் நாட்டு மக்களுக்கு வௌிப்படுத்துவோம். எவருக்கும் அநீதி ஏற்படும் வகையில் நாம் செயற்படுவதில்லை. எதனையும் மறைக்கவும் முயல்வதில்லை. எமது நாட்டின் எதிர்கால சமூகத்திற்கு இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாத வகையில் பொலிஸார் சட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும். நாட்டில் சமூகவிரோத செயல்கள், ஊழல் மோசடிகளுக்கு எதிராக செயற்பட்டு நாட்டு மக்கள் சமாதானத்துடன் வாழ்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்