பங்களாதேஷ் உடனான T20: இந்தியா 6 விக்கெட்களால் வெற்றி

பங்களாதேஷ் உடனான T20: இந்தியா 6 விக்கெட்களால் வெற்றி

பங்களாதேஷ் உடனான T20: இந்தியா 6 விக்கெட்களால் வெற்றி

எழுத்தாளர் Bella Dalima

09 Mar, 2018 | 4:47 pm

பங்களாதேஷ் உடனான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்களால் வெற்றி பெற்றது.

கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணியின் அழைப்பிற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 139 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி18.4 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 140 ஒட்டங்களைப் பெற்றது.

ஷிகர் தவான் 43 பந்துகளில் 55 ஓட்டங்களைக் குவித்தார்.

போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்துள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்