கிளிநொச்சியில் அமெரிக்கப் பிரஜை அடித்துக் கொலை

கிளிநொச்சியில் அமெரிக்கப் பிரஜை அடித்துக் கொலை

கிளிநொச்சியில் அமெரிக்கப் பிரஜை அடித்துக் கொலை

எழுத்தாளர் Bella Dalima

09 Mar, 2018 | 8:25 pm

Colombo (News 1st) 

கிளிநொச்சியில் அமெரிக்கப் பிரஜை ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க பிரஜாவுரிமை பெற்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் கிளிநொச்சியிலுள்ள காணியில் காயங்களுடன் மீட்கப்பட்டு, கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் கடந்த 6 ஆம் திகதி இடம்பெற்றது.

இந்நிலையில், அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கை மூலம் அவர் கூரான ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில் 71 வயதான இரத்தினம் துரைசிங்கம் என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

பிரேதப் பரிசோதனை யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்