கண்டியில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது

கண்டியில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது

கண்டியில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

09 Mar, 2018 | 3:07 pm

Colombo (News 1st)

கண்டி நிர்வாக மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டது.

அமைதியின்மை ஏற்பட்ட பகுதிகளில் தற்போது சுமூகமான நிலை காணப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.

இதேவேளை, அசம்பாவிதங்களால் வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பீடு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்தில் காணப்படும் 20 பிரதேச செயலகங்களில் 3 பிரதேச செயலகங்களில் மாத்திரமே அமைதியின்மை ஏற்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும், தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் எச்.எம்.பி. ஹிடிசேகர குறிப்பிட்டார்.

அத்துடன், வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் கண்டி மாவட்ட செயலாளர் கேட்டுக்கொண்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்