by Bella Dalima 08-03-2018 | 10:38 PM
Colombo (News 1st)
112 ஆவது வடக்கின் பெருஞ்சமரில் முதல் நாளில் யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி அணி ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
முதல் இன்னிங்ஸில் சென். ஜோன்ஸ் அணி 217 ஓட்டங்களைப் பெற்றதுடன் பதிலளித்தாடும் யாழ். மத்திய கல்லூரி அணி இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 49 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
உலக பாடசாலைகள் மத்தியில் பழமை வாய்ந்ததாகக் கருதப்படும் யாழ். மத்திய கல்லூரிக்கும் சென் . ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான வருடாந்த மாபெரும் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமானது.
யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென். ஜோன்ஸ் அணியின் முதலிரண்டு விக்கெட்களும் 71 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன.
என்றாலும், டி. செரோபன் 68 ஓட்டங்களையும், பி.எல்ஷான் 32 ஓட்டங்களையும், டி.டினோஷன் 28 ஓட்டங்களையும் பெற்று அணியை வலுப்படுத்தினர்.
சென். ஜோன்ஸ் அணி 71.1 ஓவரில் சகல விக்கெட்களையும் இழந்து 217 ஓட்டங்களைக் குவித்தது.
வி.வியாஷ்கான் 4 விக்கெட்களையும் எஸ்.தஷோபன் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
முதல் இன்னிங்ஸில் பதிலளித்தாடும் யாழ். மத்திய கல்லூரி அணி ஆரம்பத்திலேயே முதல் விக்கெட்டை இழந்தது.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் வி.வியாஷ்கான் 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.