பாகிஸ்தானில் பல விதங்களில் தாடி வைப்பதற்கு தடை

பாகிஸ்தானில் பல விதங்களில் தாடி வைப்பதற்கு தடை

by Staff Writer 08-03-2018 | 11:13 AM
COLOMBO (News 1st) - பாகிஸ்தானில் தாடியை பே‌ஷன் ஆக வெட்ட முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இளைஞர்கள் ஸ்டைலாக பல பெஷன்களில் தாடி வளர்க்கின்றனர். அதற்காக அங்குள்ள முடிதிருத்தும் கடைகளுக்கு சென்று சீரமைத்து கொள்கின்றனர். ஆனால் பக்துன்கவா மாகாணத்தில் தாடியை பெஷனாக வெட்ட முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பெஷாவரில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்க மாநாடு நடந்தது. அதில் இத்தகைய தீர்மானம் கொண்டு வந்து நிறை வேற்றப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் இருந்தது. அப்போது பல விதங்களில் தாடி வளர்க்கவும் அதை முடிதிருத்தும் தொழிலாளர்கள் வெட்டி சீரமைக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. தலிபான்களின் ஆதிக்கம் முடிவுக்கு வந்த நிலையிலும் தற்போது அங்கு இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே அங்கு மீண்டும் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பயங்கரவாதிகள் மிரட்டலால் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் பலவித விதங்களில் தாடி வளர்ப்பது இஸ்லாமிய சட்டத்துக்கு எதிரானது என்பதால் தான் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் முடிதிருத்தும் தொழிலாளர் சங்கத் தலைவர் ‌ஷரீப் காலு தெரிவித்துள்ளார்.