சட்டம், ஒழுங்கு அமைச்சராக  ரஞ்சித் மத்துமபண்டார

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்துமபண்டார பதவிப்பிரமாணம்

by Staff Writer 08-03-2018 | 10:18 AM
COLOMBO (News 1st) - சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்துமபண்டார பதவிப்பிரமாணம் செய்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார். இதன்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ ஆகியோர் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். பொரு நிருவாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சுப் பதவியில் ரஞ்ஜித் மத்துமபண்டார தொடர்ந்தும் செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொனராகலை மாவட்டத்தின் அபிவிருத்தி குழு தலைவராக 1982 ஆம் ஆண்டு ரஞ்ஜித் மத்துமபண்டார நியமனம் பெற்றார். 1988 ஆம் ஆண்டு முதன் முதலில் நடத்தப்பட்ட மாகாண சபைத் தேர்தலில் ஊவா மாகாண சபைக்கு தெரிவாகிய அவர் 1989 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகவும் செயற்பட்டு வருகின்றார். 2001 ஆம் ஆண்டு தொடக்கம் 2003 ஆம் ஆண்டு வரை, ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்க காலத்தின் போது சுற்றுலா அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக ரஞ்ஜித் மத்துமபண்டார் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.