by Bella Dalima 08-03-2018 | 10:07 PM
Colombo (News 1st)
கொட்டாஞ்சேனை - ஹெட்டியாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கப்பம் கோரி வழங்கப்படாததால் இந்த துப்பாக்கிப் பிரயோக சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கொழும்பிற்குப் பொறுப்பான பொலிஸ் உத்தியோகத்தர் குறிப்பிட்டார்.