ஜம்மியதுல் உலமா சபையினர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடல்

by Bella Dalima 08-03-2018 | 9:07 PM
Colombo (News 1st)  நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் பிரதிநிதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். நேற்று (07) இரவு நடைபெற்ற இந்த சந்திப்பில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் பிரதிநிதிகள் மற்றும் முஸ்லிம் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர். அனைத்து இலங்கையர்களும் ஒற்றுமையாக நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கு அவசியமான சூழலை உருவாக்கத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க தாம் தயாராக இருப்பதாக இதன்போது அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் உலமாக்கள் ஜனாதிபதியிடம் கூறியுள்ளனர். ஒரு குறிப்பிட்ட சில பிரிவினைவாதிகள் நாட்டில் கலகங்களை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதாகவும் அவர்களைக் கைது செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும் இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.