7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிக்கிறார் மம்தா மோகன்தாஸ்

7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிக்கிறார் மம்தா மோகன்தாஸ்

7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிக்கிறார் மம்தா மோகன்தாஸ்

எழுத்தாளர் Bella Dalima

07 Mar, 2018 | 6:40 pm

சிவப்பதிகாரம், தடையற தாக்க படங்களில் நடித்த மம்தா மோகன்தாஸ் தற்போது 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிக்க வந்துள்ளார்.

விஜயகாந்த் நடிப்பில் 80-களில் வெளியாகி வெற்றிபெற்ற படம் ‘ஊமை விழிகள்.’ இது நடிப்பு பயிற்சிக்கல்லூரி மாணவர்களால் உருவாக்கப்பட்ட படம்.

இதே தலைப்பில் மீண்டும் தமிழில் படம் உருவாகிறது. இந்தப் படம் ‘ஊமை விழிகள்’ படத்தின் தொடர்ச்சி அல்ல. இது புதிய கதை.

பிரபுதேவா இதில் நாயகனாக நடிக்கிறார். ஆகாஷ் சாம் என்பவர் இயக்கும் இந்த படத்தில் மம்தா மோகன்தாஸ், பிரபுதேவாவிற்கு ஜோடியாக நடிக்கிறார்.

இதன் மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடிக்க முடியும் என நம்புவதாக மம்தா மோகன்தாஸ் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்