பில்கேட்ஸை பின்னுக்குத் தள்ளிய அமேசான் நிறுவனர்

2018 ஆம் ஆண்டிற்கான உலக பணக்காரர்கள் பட்டியலில் பில் கேட்ஸை பின்னுக்குத் தள்ளிய அமேசான் நிறுவனர்

by Bella Dalima 07-03-2018 | 4:54 PM
Colombo (News 1st) 2018 ஆம் ஆண்டிற்கான உலக பணக்காரர்கள் பட்டியலை முன்னணி பத்திரிகையான ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸ் முதலிடத்தைப் பிடித்துள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உரிமையாளர் பில் கேட்ஸ் இரண்டாவது இடத்தையும், வாரன் பபெட் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலகின் பணக்காரர்கள் பட்டியலில் 119 இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவின் அலிம் பிரேம்ஜி 58 ஆவது இடத்தையும், லட்சுமி மிட்டல் 62 ஆவது இடத்தையும், சிவ் நாடார் 98 ஆவது இடத்தையும் திலீப் சங்வி 115 ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 544 ஆவது இடத்தில் இருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த ஆண்டு 766 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். உலக பணக்காரர்கள் பெயர் பட்டியலில் இந்தியாவின் முகேஷ் அம்பானி 19 ஆவது இடத்தையும் அவரின் இளைய சகோதரர் அனில் அம்பானி 887 வது இடத்தையும் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.