கண்டியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீக்கம்

கண்டியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீக்கம்

by Staff Writer 07-03-2018 | 7:00 AM
COLOMBO (News 1st) - கண்டி நிர்வாக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணிக்கு நீக்கப்பட்டது. இதுவரை பிரதேசத்தில் சுமூகமான நிலை நிலவுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, கண்டி நிர்வாக மாவட்டத்துக்கு உட்பட்ட சகல பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்படடுள்ளதாக மத்திய மாகாண முதலமைச்சர் அறிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி அமைதியை நிலைநிறுத்துவதற்காக 7 நாட்கள் அவசரகால நிலைமை அமுல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக நாட்டில் நிலவும் கலவரங்கள் மற்றும் அமைதியின்மையின் காரணமாகவும் அதனால் ஏற்பட்டுள்ள உயிர்ச் சேதம் மற்றும் உடமைகளுக்கு ஏற்பட்டள்ள சேதம் காரணமாக அவசர கால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.