கண்டியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீக்கம்

கண்டியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீக்கம்

கண்டியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீக்கம்

எழுத்தாளர் Staff Writer

07 Mar, 2018 | 7:00 am

COLOMBO (News 1st) – கண்டி நிர்வாக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணிக்கு நீக்கப்பட்டது.

இதுவரை பிரதேசத்தில் சுமூகமான நிலை நிலவுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கண்டி நிர்வாக மாவட்டத்துக்கு உட்பட்ட சகல பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை
வழங்கப்படடுள்ளதாக மத்திய மாகாண முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி அமைதியை நிலைநிறுத்துவதற்காக 7 நாட்கள் அவசரகால நிலைமை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களாக நாட்டில் நிலவும் கலவரங்கள் மற்றும் அமைதியின்மையின் காரணமாகவும் அதனால்
ஏற்பட்டுள்ள உயிர்ச் சேதம் மற்றும் உடமைகளுக்கு ஏற்பட்டள்ள சேதம் காரணமாக அவசர கால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்