சென்னையில் நடைபெற்ற ‘அபியும் அனுவும்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய சுஹாசினி, மணிரத்னம் குறித்த இரகசியம் ஒன்றை வெளியிட்டார்.
யூட்லி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் படம் ‘அபியும் அனுவும்’.
தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாராகி இருக்கும் இந்தப் படத்தில் டொவினோ தாமஸ், பியா பாஜ்பாய், பிரபு, சுஹாசினி, ரோகினி ஆகியோர் நடித்துள்ளார்கள்.
தரண் இசையமைத்திருக்கும் இப்படத்தை பி.ஆர். விஜயலட்சுமி இயக்கியிருக்கிறார்.
பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பேசிய சுஹாசினி,
மணிரத்னம் யாரிடமும் உதவியாளராக வேலை செய்யவில்லை என்று தான் எல்லோருக்கும் தெரியும். ஆனால், விஜியின் அண்ணன் ரவி பந்துலுவின் கன்னடப் படத்தில் உதவி இயக்குனராக வேலை செய்திருக்கிறார். அதை இங்கு நினைவுகூரக் கடமைப்பட்டிருக்கிறேன். ரொம்ப நாள் கழித்து பிரபுவுடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி
என்று கூறினார்.
நிகழ்ச்சியில் இயக்குனர் பி.ஆர்.விஜயலட்சுமி, பியாபாஜ்பாய் உட்பட பலர் கலந்துகொண்டனர்.