by Bella Dalima 06-03-2018 | 7:49 PM
கண்டி நிர்வாக மாவட்டத்தில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ஊரடங்குச்சட்டம் அமலில் இருக்குமென பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
தெல்தெனிய பொலிஸ் பிரிவில் ஏற்பட்டுள்ள நிலைமையைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.