சுதந்திரக்கிண்ணT20: முதற்போட்டியில் இலங்கை ​வெற்றி

சுதந்திரக்கிண்ண T20: முதல் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்களால் வெற்றி

by Bella Dalima 06-03-2018 | 10:42 PM
Colombo (News 1st)  சுதந்திரக்கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்களால் வெற்றியீட்டியது. கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 174 ஓட்டங்களைப் பெற்றது. முதலிரண்டு விக்கெட்களும் 9 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்ட போதிலும், ஷிகர் தவான் 90 ஓட்டங்களை விளாசி அணியை வலுப்படுத்தினார். மனிஷ் பாண்டே 37 ஓட்டங்களையும், ரிஷபா பான்ட் 23 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் துஷ்மந்த சமீர 2 விக்கெட்களை வீழ்த்தினார். இந்நிலையில், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 5 விக்கெட்களை இழந்து 18.3 ஓவர்களில் வெற்றியிலக்கை எட்டியது. குசல் பெரேரா 37 பந்துகளுக்கு 66 ஓட்டங்களைப் பெற்றார்.