சுகாதார சேவைகளுக்கான VAT வரியை நீக்க நடவடிக்கை

சுகாதார சேவைகளுக்கான VAT வரியை நீக்க நடவடிக்கை

by Bella Dalima 06-03-2018 | 6:16 PM
சுகாதார சேவைகளுக்கான VAT வரியை நீக்குமாறு அமைச்சரவைப் பத்திரமொன்றை தாக்கல் செய்வதற்கு சுகாதார அமைச்சர் ராஜித ​சேனாரத்ன நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு, சுகாதார அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தனியார் வைத்தியசாலைகளில் சேவைகளைப் பெறும்போது அதற்கான கட்டணங்களுடன் VAT வரி அறவிடப்படுவதால் நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக பல்வேறு சங்கங்கள் சுகாதார அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.