அரிய வகை சுமத்ரா புலி கொடூரமாகக் கொலை

இந்தோனேசியாவில் மிக அரிய வகை சுமத்ரா புலி கொடூரமாகக் கொலை

by Bella Dalima 06-03-2018 | 3:33 PM
உலகின் மிக அரிய வகை உயிரினமான சுமத்ரா வகை புலி கொடூரமாகக் கொல்லப்பட்டிப்பது வன உயிரின ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் மன்டெய்லிங் நாடல் என்ற மலைக்கிராமத்தில் மிகவும் அரிய வகையான சுமத்ரா இனப்புலி ஒன்று கொடூரமாகக் கொல்லப்பட்டு, தோல் உரிக்கப்பட்டு ஒரு தொழிற்சாலையின் மேற்கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை வனத்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்தோனேசிய வனத்துறை நடத்திய விசாரணையில் புலியின் பெரும்பாலான பாகங்கள் அகற்றப்பட்டு விற்கப்பட்டமை தெரியவந்துள்ளது. கடந்த ஞாயிறன்று வனத்திற்கு வேட்டையாடச் சென்ற மலைக்கிராமத்தை சேர்ந்தவர்களை புலி தாக்கியதாகவும், இதனால் அந்த புலி கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் மொத்தம் 400 சுமத்ரா வகை புலிகளே உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.