ஒஸ்கார் விருதை திருடிய நபர் கைது

ஒஸ்கார் விருதை திருடிய நபர் கைது

ஒஸ்கார் விருதை திருடிய நபர் கைது

எழுத்தாளர் Staff Writer

06 Mar, 2018 | 10:03 am

COLOMBO (News 1st) – சிறந்த நடிகைக்கான ஒஸ்கார் விருதை பெற்ற பிரான்சிஸ் மெக்டொமன்ட்டின் ஒஸ்கார் விருது திருடப்பட்டுள்ளது.

ஒஸ்கார் விருது வழங்கும் விழாவை அடுத்து இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போதே இந்த விருது திருடப்பட்டுள்ளது.

இந்த விருதை திருடிய சந்தேகபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

லொஸ் ஏஞ்சல்ஸ் பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் பின்னர் ஒஸ்கார் விருது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருடப்பட்ட விருது, மீண்டும் நடிகை மெக்டொமன்ட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.

47 வயதான சந்தேகநபரை விரைவில் நீதிமன்றத்திற்கு ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Three Billboards Outside Ebbing, Missour படத்தில் நடித்தமைக்காகவே மெக்டொமன்டுக்கு சிறந்த நடிகைக்கான ஒஸ்கார் விருது கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்