மழையுடனான காலநிலை குறைவடையும் சாத்தியம்

மழையுடனான காலநிலை குறைவடையும் சாத்தியம்

by Staff Writer 05-03-2018 | 3:43 PM
COLOMBO (News 1st) - நாட்டின் சில பகுதிகளில் நிலவிய மழையுடனான காலநிலை குறைவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. பிற்பகல் இரண்டு மணிமுதல் மேல் மாகாணம், சப்ரகமுவ மற்றும் தென் மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. காலி ,யக்கமுல்ல பகுதியில் நேற்று பெய்த கடும் மழை காரணமாக மண்மேடு ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது. இந்த விபத்தில் உயிராபத்துக்கள் எதுவும் பதிவாகவில்லை ஆயினும் வீடொன்று முழுதாக சேதமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை நாட்டில் சில மாவட்டங்களில் நிலவி வரும் வறட்சி காரணமாக 5 மாவட்டங்களைச் சேர்ந்த 3 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடும் வறட்சி காரணமாக அநுராதபுரம் , பொலன்னறுவை, குருனாகல், புத்தளம் மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. புத்தளம் மாவட்டமே வறட்சியினால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக, இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.