ஒஸ்கார் விருதுகள் 2018: வெற்றியாளர்கள் பட்டியல்

ஒஸ்கார் விருதுகள் 2018: வெற்றியாளர்கள் பட்டியல்

ஒஸ்கார் விருதுகள் 2018: வெற்றியாளர்கள் பட்டியல்

எழுத்தாளர் Staff Writer

05 Mar, 2018 | 5:08 pm

COLOMBO (News 1st) – ஹாலிவுட் திரையுலகின் மிக உயரிய கௌரவமான 90 ஆவது ஒஸ்கார் விருது வழங்கும் விழா லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இம்முறை மிக கோலாகலமாக நடைபெற்றது.

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 90 ஆவது ஒஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெற்றது, காலை 7 மணியளவில் ஆரம்பமாகிய இந்த நிகழ்ச்சியை ஜிம்மி கிம்மெல் தொகுத்து வழங்கினார்.

இந்த விழாவில் ஹாலிவுட் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். உலகளவில் பல படங்களும் விருது பட்டியலில் இடம்பிடித்திருந்த நிலையில், ஒஸ்கார் விருதை வென்ற படங்களின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் த ஷேப் ஆப் வாட்டர் (The Shape of Water) படத்திற்கு சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த இசை மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு என 4 ஒஸ்கார் விருதுகள் கிடைத்துள்ளன.

கிறிஸ்டோபர் நோலனின் டங்கிர்க் படத்திற்கு 3 ஒஸ்கார் விருதுகள் கிடைத்துள்ளன. அதேபோல் பிளேட் ரன்னர் 2049, டார்க்கஸ்ட் ஹார், த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிசோரி உள்ளிட்ட படங்கள் தலா 2 ஒஸ்கார் விருதுகளை வென்றுள்ளன.

ஒஸ்கார் விருதை வென்ற படங்கள், கலைஞர்கள் குறித்த முழுவிபரம் பின்வருமாறு:

 • சிறந்த படம் – த ஷேப் ஆப் வாட்டர் (The Shape of Water)
 • சிறந்த நடிகர் – கேரி ஓல்டுமேன் (டார்க்ஸ்ட் ஹார்)
 • சிறந்த நடிகை – பிரான்சஸ் மிக்டார்மண்ட் (த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிசோரி)
 • சிறந்த இயக்கம் – கில்லர்மோ டெல் டோரோ (த ஷேப் ஆப் வாட்டர்)
 • சிறந்த பாடல் – கோகோ (Remember Me)
 • சிறந்த இசை – த ஷேப் ஆப் வாட்டர் (அலெக்சாண்ட்ரே டெஸ்ப்லெட்)
 • சிறந்த ஒளிப்பதிவு – பிளேட் ரன்னர் 2049 (ரோஜர் ஏ.டெக்கின்ஸ்)
 • சிறந்த திரைக்கதை – கெட் அவுட் (ஜோர்டன் பீல்)
 • சிறந்த தழுவல் திரைக்கதை – கால் மி பை யுவர் நேம் (ஜேம்ஸ் இவோரி)
 • சிறந்த லைவ் ஆக்‌ஷன் திரைப்படம் – த சைலன்ட் சைல்ட் (கிறிஸ் ஓவர்டன், ராச்சல் ஷென்டன்)
 • சிறந்த ஆவண குறும்படம் – ஹெவன் இஸ் எ டிராபிக் ஜாம் ஆன் த 405 (ப்ராங்க் ஸ்டிப்பெல்)
 • சிறந்த படத்தொகுப்பு – டங்கிர்க் (லீ ஸ்மித்)
 • சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் – பிளேட் ரன்னர் 2049 (ஜான் நெல்சன், கெர்டு நெஃப்சர், பால் லாம்பர்ட் மற்றும் ரிச்சர்ட் ஆர்.ஹுவர்)
 • சிறந்த துணை நடிகர் – சாம் ராக்வெல் (த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிசோரி)
 • சிறந்த துணை நடிகை – ஆலிசன் ஜேனி (ஐ, டோன்யா)
 • சிறந்த வெளிநாட்டு படம் – எ பென்டாஸ்டிக் வுமன் (சிலி)
 • சிறந்த அனிமேஷன் படம் – கோகோ (லீ அன்கிர்ச், டார்லா கே.ஆன்டர்சன்)
 • சிறந்த அனிமேஷன் குறும்படம் – டியர் பாஸ்கட்பால் (க்ளென் கீன், கோப் ப்ரயண்ட்)
 • தயாரிப்பு வடிவமைப்பு – தி ஷேப் ஆஃப் வாட்டர்
 • ஒலித்தொகுப்பு – டங்கிர்க் (ரிச்சர்டு கிங், அலெக்ஸ் கிப்சன்)
 • ஒலி இணைப்பு – டங்கிர்க் (கடரெக், க்ரே, மார்க்)
 • சிறந்த ஆவணப்படம் – ஐகரஸ் (பிரயன் போகல், டேன் கோகன்)
 • ஆடை வடிவமைப்பு – பாண்டம் த்ரெட் (மார்க் ப்ரிட்ஜஸ்)
 • ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் – டார்க்கஸ்ட் ஹார் (கசுரியோ சுஜி, டேவிட் மலினோஸ்கி, லக்கி சிபிக்)

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்