சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் கருத்து

சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் முன்னாள் நிதி அமைச்சர் கருத்து

by Staff Writer 04-03-2018 | 8:03 PM
COLOMBO (News 1st) - சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கருத்து தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார் முன்னாள் நிதி அமைச்சர் வி கருணாநாயக்க தெரிவித்த கருத்து....
''பொருளாதாரத்தை வெற்றிக் கொண்டால் எம்மால் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியும் சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றின் ஆலோசனைகளை கேட்பதைத் தவிர அவர்கள் கூறும் விடயங்களை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. சர்வதேச நாணய நிதியத்தின் செயற்பாடுகள் முடிவடைந்துள்ளமையினால் அவர்களுக்கு தற்போது நாட்டில் இருந்து செல்ல முடியும்''
மேலும் இதன்போது அமைச்சரவை மறுசீரமைப்பு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, உருவங்களை மாற்றியமையினால் பிரச்சினை தீர்கப்படுவதில்லை எனவும் நீண்ட காலம் செல்ல முன்னர் சரியான தீர்மானத்திற்கு செல்வார்கள் என நம்புவதாகவும் முன்னாள் நிதி அமைச்சர் பதலளித்துள்ளார். https://www.youtube.com/watch?v=Iyr8k7DTDsg