இயற்கை அனர்த்தங்களை அறிய புதிய செயற்கைக்கோள்

இயற்கை அனர்த்தங்களை முன்கூட்டியே அறிய புதிய செயற்கைக்கோள்

by Staff Writer 04-03-2018 | 6:31 PM
COLOMBO (News 1st) - வானிலை நிலவரங்களை துல்லியமாக முன்கூட்டியே கண்டறியும் வகையில், மேம்படுத்தப்பட்ட கோயஸ்-எஸ் என்ற செயற்கைக்கோளை நாசா விண்ணில் செலுத்தியுள்ளது. வானிலை நிலவரங்களை துல்லியமாகக் முன்கூட்டியே கண்டறியும் வகையில், மேம்படுத்தப்பட்ட கோயஸ்-எஸ் என்ற செயற்கைக்கோளை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா விண்ணில் செலுத்தியுள்ளது. கோயஸ்-எஸ் (GOES-S) செயற்கைகோள் அட்லஸ் 5 (ATLAS 5) ரொக்கெட் மூலம் கேப் கேனவரலில் உள்ள தளத்தில் இருந்து ஏவப்பட்டது. வானிலை நிலவரங்களை முன்கூட்டியே தெரிந்து கொள்வதற்காக மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களுடன் கோயஸ்-எஸ் செயற்கைக்கோள் தயாரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் ஏற்படும் புயல், காட்டுத் தீ, வெள்ளம், மண் சரிவு போன்ற இயற்கை பேரிடர்களை துல்லியமாக அறிவதற்கு இந்த செயற்கை கோள் உதவும் என நம்பப்படுகின்றது. இதுகுறித்து நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில் வானிலை தொழில்நுட்பத்தில் இது முக்கிய மைல்கல்லாக இருக்கும் என்று தெரிவித்தனர்.