மக்கள் சக்தி:  ரத்மலே கிராம மக்களுக்கு குடிநீர்

அகலவத்த ரத்மலே கிராம மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு மக்கள் சக்தி திட்டத்தின் மூலம் தீர்வு

by Staff Writer 04-03-2018 | 8:21 PM
COLOMBO (News 1st) - களுத்துறை மாவட்ட அகலவத்த ரத்மலே கிராம மக்கள் எதிநோக்கிய குடி நீர் பிரச்சினைக்கு மக்கள் சக்தி திட்டத்தின் மூலம் தீர்வினைப் பெற்றுக் கொடுக்க முடிந்தது. அகலவத்தை ரத்மலே கிராம மக்கள் நீண்ட காலம் குடிநீர் பிரச்சினையை எதிர்கொண்டு வந்தனர். இந்த பிரதேசம் அடிக்கடி வௌ்ளத்தில் மூழ்குவதால், கிணறுகள் மூலம் சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். அத்துடன் வறட்சி காலங்களில் கிணறுகளில் நீர் வற்றுவதனாலும் மக்கள் நீண்ட காலம் குடிநீர் பிரச்சினையை எதிர்கொண்டனர். இந்த பிரச்சினைகளை மக்கள் சக்தி திட்டத்தின் மூலம் அடையாளம் கண்ட நாம் பிரதேசத்திற்கு குடிநீர் வழங்கும் திட்டத்தினை நவம்பர் 12 ஆம் திகதி ஆரம்பித்தோம். இந்திய பிரதம நிறைவேற்று அதிகாரிகளின் சங்கத்தின் ஒத்துழைப்புடன் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்தத் திட்டம் இன்று மக்கள் பாவைனைக்கு திறந்து வைக்கப்பட்டதுடன், இந்த நிகழ்வில் கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தம்பதொல சரணாலயத்தில் இருந்து உயர் அமுக்கம் மூலம் இரண்டரை கிலோமீற்றருக்கு நீர் குழாய் மூலம், நீர் கொண்டு செல்லப்படுவதுடன், நய்கொட மலை உச்சியில் அமைக்கப்பட்டுள்ள நீர் தாங்கிக்கு நீர் கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்தது வழங்கப்பட்டுள்ள குழாய் கட்டமைப்பு மூலம் வீடுகளுக்கு நீர் விநியோகிக்கப்படுகிறது. https://www.youtube.com/watch?v=NhenvgpK894